சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது எப்போது எப்படி ? Tamil Nadu | Union Govt. Of India

 தமிழ்நாடு என்ற எழுதக்கூடாது தமிழகம் என்று எழுதவேண்டும் பெரியார் என்று எழுதக்கூடாது ஈவேரா என்று எழுதவேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக அச்சு ஊடகத் துறையில் கோலோச்சும் வந்தேறிகள் தமிழர்களுக்குப் பாடம் எடுக்கும் வரலாற்றுச் சுருக்கம் இது.




தமிழ்நாடு என்றவுடன் ஏன் இவர்கள் இப்படி துடிக்கிறார்கள் தமிழ்நாடு என்று கூறினால் அது தனி நாடு எனப் பொருள்படுமாம்  இதை யார் சொல்கிறார்கள் என்றால் இந்தியா என்கிற பெயரை கூட இன்றுவரை ஏற்க மறுத்து பாரத் மாதா கி ஜே என்று கருதுபவர்கள் தான்.

இந்தியா என்கிற பெயர் நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்த வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்பது இவர்களின் கூற்றுசரி பாரதம் என்கிற பெயர் இந்தியாவிற்கு இருந்ததா அது எங்கிருந்து வந்தது.

பாரதம் என்கிற நிலப்பரப்பு இந்துக்களின் வேதங்களில் கூட காணப்படவில்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வரலாற்று ஆய்வாளருமான டி.என். ஜா அவர்கள்


பிபிசி(BBC) செய்தி நிறுவனத்திற்கு டி.என். ஜா அளித்த நேர்காணல் ஒன்றில் கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்கத்து பேரரசன் காரவேலன் காலத்தில் கிடைத்த கல்வெட்டு ஆவணங்களில் தான் பாரதவர்ஷா என்கிற பெயர் முதன்முதலில் கையாளப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

அதிலும் கூட பாரதம் என்பது மகதநாடு  இல்லாத பிற வட இந்தியப் பகுதிகளையே  சுட்டிக் காட்டுவதாகவும், இந்தியாவின் எந்த ஒரு தொன்மையான ஆவணங்களும் பாரதம் என்பது தாய்  என சித்தரிக்கப்படவில்லை எனவும் தெளிவுபடக் கூறுகிறார்.


பாரத தாய் என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியது வங்கத்துக்  கவிஞரான  D.L ராய் என்பதை சுட்டிக்காட்டியுள்ள டி.என். ஜா அதற்குப் பிறகு பக்கிம் சந்திர சாட்டர்ஜியின்  ஆனந்த மடம் நூலில் பாரதத்தாய் என்கிற சொல் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

D.L ராய்


இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியா வேண்டாம் பாரதம்தான் வேண்டும் என கொக்கரிக்கபவர்ளுக்கு இந்து என்கிற பெயர் மட்டும் கட்டிக் கரும்பாக நிற்கிறது.

இந்த மட்டும் என்ன இவர்களது முப்பாட்டன் வைத்த பெயரா என்றால் அதுவும் வெள்ளைக்காரன் வைத்ததுதான்.

இந்து என்கிற சொல் இந்தியாவில் பிறந்த வேதங்களிலோ,  உபநிடதங்களிலோ, ஆரண்யகங்களிலோ,  இலக்கியங்களிலோ, பிரமண்யங்கள் எனக்  கூறப்படும் வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ  இல்லை இதிகாசங்களிலும் கிடையாது.


இந்து என்கிற  சொல் (18-ஆம்) பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஓரியண்டியலிஸ்ட்(Orientalist)  அதாவது கீழ்த்திசை நாடுகளைப்  பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல், 

இந்த சொல்லுக்கான மரியாதை என்னவென்று கேட்டால் இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தது என்பதே ஆகும். 

இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.

மறைந்த சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும் அதில் வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்த என்று பொதுப் பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம் என்று கூறியிருக்கிறார்.

அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

1799-ஆம் ஆண்டில் உள்நாட்டு நீதி நெறிகளை தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபோது கல்கத்தாவில் இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் உள்நாட்டு நீதி நெறிகளை தொகுத்து அதற்கு இந்துசட்டம்(HINDU LAW )  என பெயரிட்டார்.

அப்போதுதான் இந்து என்ற சொல் முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெற்றது,

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல் இந்த நாட்டில் எந்த மொழியிலும் இல்லாத சொல் திராவிட மொழிகளும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது என நான் இந்துவல்ல நீங்கள் என்கிற நூலில் தெளிவாகக் கூறியிருக்கிறார், வரலாற்று ஆய்வாளரான தோ.பரமசிவன்.

சரி இந்தியா என்கிற நாடு எப்படி உருவானது ?



ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியா என்கிற இப்போதைய நிலப்பரப்பு இல்லை என்பது குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்க முடியும்,

தமிழ்நாடு தனியொரு நாடாக இருந்ததில்லை சேரநாடு, சோழநாடு,பாண்டியநாடு, பல்லவ நாடு என பல்வேறு நாடுகள் ஆகத்தான் இருந்தது.

தலைநகர் சென்னைக்கு அருகில் இருந்த நாட்டின் பெயர் இடைக்கழிநாடு இன்று வரைக்கும் இடைக்கழிநாடு என்கிற பெயரோடு அழைக்கப்படுகிறது, வந்தேறிகளின் வாயில் இந்த நாடுகளை எடுத்துப் போட்டால் , இடக்கழியகம், சேரகம், சோழகம், பாண்டியகம், இடம் என பொதுப் பெயர் வைப்பார்கள்.

இப்படி குமரி முதல் இமயம்வரை தனித்தனி நாடுகளாக இருந்தவற்றை துப்பாக்கி முனையில் வென்று ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா.

சிந்துநதி பாய்ந்தநிலம்  என்பதால் தான் கைப்பற்றிய நிலப்பரப்புக்கு இந்தியா என பெயர் சூட்டினார்கள் வெள்ளையர்கள்.

சிந்துவெளி நாகரிகத்தை Indus Valley Civilization ) என்று எழுதிய வெள்ளைக்காரன் அதைக் கொண்டுதான் இந்தியா என பெயர் சூட்டினார்கள் .


தமிழ்மொழி முதலில் 
தமிதா என்று உச்சரிக்கப்பட்டது, பின்னர் தமிழ் என உச்சரிக்கப்பட்டு, அதன் பிறகு திராவிட என உருமாற்றம் அடைந்து தமிழ் அல்லது திராவிடம் என்பது தான் ஆரியர்கள் வருகைக்கு முன்பு இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததாகவும் டாக்டர் அம்பேத்கர் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

அம்பேத்காரின் ஆய்வுக் கட்டுரைப்படி இந்தியாவுக்கு தமிழ்நாடு என்கிற பெயர் வைத்தால் கூட முற்றிலும் பொருத்தமாக இருக்கும் என்பதுதான் வரலாறு .

தமிழர்கள் நாகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களது மொழி தமிழ் என்றும் கூறியுள்ள அம்பேத்கர் வடஇந்தியாவில் வாழ்ந்த  நாகர்கள் தாய்மொழி தமிழை கைவிட்டு சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டுவிட தென்னிந்திய  நாகர்கள் தாய்மொழி தமிழை பாதுகாத்து வந்ததாகவும் அம்பேத்கர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு பெரும்பாலானவர்கள் தியாகி சங்கரலிங்கனார் தான் எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள்.


உண்மையில் தமிழ்நாடு என்கிற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பியவர் தமிழ்தேசிய இயக்கத்தினரால் கன்னடர் என முத்திரை குத்தப்படும் தந்தை பெரியார்.

 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு குறித்து அறிக்கையை வெளியிட பெரியார் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள் ஆந்திரர்கள் கன்னடர்கள் பிரிந்து போன பிறகும்கூட தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட பார்ப்பானும் வடநாட்டான் சூழ்ச்சி செய்து சென்னை நாடு என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

தமிழ் தமிழ்நாடு என்கிற பெயர் இந்த நாட்டிற்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டால் என்னுடைய வாழ்வும் என்னை பின்பற்றுபாவரின் வாழ்வும் எதற்காக இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதோடு நிறுத்தவில்லை பெரியார் ஆந்திரா பிறந்ததிலிருந்தே நாட்டு பிரிவினையில் தனக்கு கவலை இல்லாமல் போய் விட்டதாகவும் கன்னடமும் மலையாளமும் சீக்கிரம் புரிந்தால் நல்லது என்கிற எண்ணம் தோன்றி விட்டதாகவும் கூறிய இன்னொரு அறிக்கையும் விட்டார்.


கன்னடர்களும் மலையாளிகளும் இனப்பற்றும் தன்மானமும் இல்லாமல் ஒன்றிய ஆட்சிக்கு அடிமையாய் இருப்பதை பற்றி சிறிதும் கவலையின்றி இருப்பதாக குற்றம் சாட்டிய பெரியார் அவர்கள் நம்மோடு கலந்து இருந்தால் தமிழ்நாடு என சொல்வதற்கு இடமில்லாமல் செய்வார்கள் என்பதால் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன் அந்தப்படியே பிரிந்து விட்டதால் இதை வரவேற்கிறேன் எனக் கூறியிருந்தார்.

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுமாறு பெரியார் கோரிக்கை விடுத்து ஓர் ஆண்டிற்குப் பிறகுதான் 1956ஆம் ஆண்டு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் மேற்கொண்டார்

  • அவரது உண்ணாவிரதம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் கூறுவது மட்டுமல்ல
  • சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் வைத்தல் வேண்டும்.
  • ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
  •  வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விளக்கி சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும்.
  • அரசு பணியில் உள்ள அனைவரும் கதர்சட்டை வேண்டும்.
  •  ஆடம்பரச் செலவுகளை குறைத்து சாதாரண மனிதர்களைப் போல அரசியல்வாதிகள் வாழ வேண்டும்.
  • தேர்தல் முறையில் மாறுதல் செய்ய வேண்டும்.
  • தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
  •  இந்தியா முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • விளைச்சலில் விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வழங்க வேண்டும்.
  • ஒன்றிய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
  • பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதை தடுக்க வேண்டும்.

இப்படியென 12 கோரிக்கைகளை முன்வைத்து சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார்.

ஆனால் சங்கரலிங்கனாரின் எந்தக் கோரிக்கையையும் காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை, அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாள் காமராஜர், ம.பொ.சி, கக்கன், அண்ணா, ஜீவானந்தம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் கொள்கையில் உறுதியுடன் இருந்த சங்கரலிங்கனார் தொடர்ச்சியாக (75) எழுபத்தைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 13 அன்று உயிரிழந்தார்.

      உயிர்விடுவதற்கு  முன்பு அவர் எழுதிய கடிதத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும் எனவும் அறிவித்திறன் இருந்தால் திருத்திக் கொள்ளட்டும் என்றும் எழுதியிருந்தார். தன் உடலைக் கூட காங்கிரஸ்காரர்கள் தொடக் கூடாது என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாயாண்டி பாரதியிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்தார்.

      பிரியா சங்கரலிங்கனார் மா பொ சிவஞானம் ஆகியோர் தொடர்ந்து 1961 என்ற பெயரில் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அட்டவணையில் மாநிலங்களின் பெயர்கள் கொண்டிருக்கிற பகுதியில் சென்னை என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழ்நாடு என்ற சொல்லை பதிவு செய்வதை அந்த மசோதா வலியுறுத்தியது அந்த மசோதாவை அறிமுகம் செய்து உரையாற்றிய கம்யூனிஸ்ட் எம்.பி புபேஷ் குப்தா  மொழி வரலாறு பண்பாடு இசைவாக மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால் அந்த கோரிக்கை தோல்வியில் முடிந்தது. 

       இது குறித்த விவாதத்தின் போது தமிழ்நாடு எனப் பெயர் வைப்பதன் மூலம் நீங்கள் எதை அடையப் போகிறீர்கள்? என உறுப்பினர் ஒருவர் அண்ணாவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

      அதற்கு பார்லிமென்ட் ( Parliament )என்பதை லோக்சபா என மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள், கவுன்சில் ஆஃப் ஸ்டேட் என்பதை ராஜ்ய சபா என மாற்றியதன் மூலம் எதை அடைந்தீர்கள், ப்ரெசிடெண்ட்  என்பதை ராஷ்டிரபதி என மாற்றியதன் மூலம் எதை அடைந்தீர்கள், என மறு கேள்வி எழுப்பிய அண்ணா உங்களிடம் நான் கேட்கிறேன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதன் மூலம் நீங்கள் எதை இழக்க போகிறீர்கள் என்று கேட்டார்.

       அதற்கு அந்த உறுப்பினர் மட்டுமல்ல யாரிடமும் இல்லை.

      அதன் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

      அதன்பிறகு தியாகி சங்கரலிங்கனார் கூறியது போல் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்பட்டது 1967ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆனார் அண்ணா.

      முதலமைச்சர் ஆனதும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என்கிற பெயர் பலகை வைக்கப்பட்டது தமிழக அரசின் கோபுரத்தில் இருந்த கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ் என்கிற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்ட தமிழக அரசு என மாற்றம் செய்யப்பட்டது.


       அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த சத்யமேவ ஜெயதே என்ற மொழி வாக்கியம் நீக்கப்பட்ட வாய்மையே வெல்லும் என தமிழில் எழுதப் பட்டது.

       அதோடு நில்லாமல் தமிழில் ஊடுருவியிருந்த பெரும்பாலான வடமொழிச்     சொற்களையும் ஒழித்துக் கட்டினார்.

  •      அக்கிராசனர் தலைவராகவும் காரியதரிசி செயலாளராகவும் பொருளாளராகவும் பிரசங்கம் சொற்பொழிவு மாற்றப்பட்டது உபன்யாசம் முறையாகவும் மகாஜனம் பொதுமக்களும் ராஜ்யம் அரசாகவும் நமஸ்காரம் வணக்கமாகவும் கிரகப்பிரவேசம் மகோற்சவ விஞ்ஞாபனம் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஆகவும் கல்யாண பத்திரிக்கை திருமண அழைப்பிதழ் ஆகவும் ஸ்ரீம் ஸ்ரீம் இறுதியாகவும் மாற்றம் பெற்ற தமிழ் மணக்க தொடங்கியது.  

      1967 ஜூலை 18 ஆம் நாள் அதனால் வரை மெட்ராஸ் ஸ்டேட் எனவும் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது.

      1968ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது நவம்பர் மாதம் இதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இவ்வளவு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டி இருக்கும்போது அந்தப் பெயர் கூடாது என நமக்கே  வகுப்பு எடுக்கிறார்கள் வந்தேறிகள்.


நன்றி!

No comments

Theme images by Sookhee Lee. Powered by Blogger.