இன்னொரு பிறவி இருக்குமெண்டால் ; நான் தமிழனாகப் பிறப்பேன் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் - If there is another birth; I will be born a Tamil Netaji Subhash Chandra Bose
இன்னொரு பிறவி உண்டென்றால் நான் தமிழனாக பிறப்பேன் என்று 1931 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த பொதுகூட்டத்தில் வீரமுழக்கமிட்டார் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்.
1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் மேற்கு வங்கத்தில் பிறந்தார் சுபாஷ் 125ஆம் ஆண்டு பிறந்தநாளை அவரை நினைவுகூர்வோம். 27 தலைமுறையாக வாங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாவும் பணியாற்றியது அவரது குடும்பத்திற்கு உண்டு. பள்ளி படிப்பை கொல்கத்தாவில் முடித்த அவர் மற்றும் மேற்படிப்பை லண்டன் கேம்பிரிட்ஜ் (Cambridge university)பல்கலைகழகத்தில் முடித்தார் .
இன்றைய IAS தேர்வானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ICS தேர்வாக நடத்தப்பட்டது அதில் தேர்வு எழுதிய நேதாஜி இந்திய அளவில் நான்காவது இடத்தை தேர்ச்சி பெற்றார். ஆயினும் நம் தாய்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பணி செய்ய விரும்பாமல் அவருக்கு கிடைத்த உயர் பதவியான இந்திய குடிமை பணியை ஏற்காமல் அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்தார். அனால் ICS பதவியை ஏற்க சொன்னார்கள் உண்மையும் நேர்மையும் உள்ளவனாய் வாழ்ந்தால் போதும் நம் தேசத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்க நினைக்கிறன் அதற்க்கு ICS பதவி தேவைப்படாது என்றார் நேதாஜி.
அதனுடன் போராட்டம் பல கண்டார். அதற்காக ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டு ஆறுமாத காலம் சிறைவாசத்தையும் அனுபவித்தார் நேதாஜி. FORWARD எனும் ஆங்கில இதழில் ஆசிரியரான நேதாஜி ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்தை எதிர்த்து உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் நேதாஜி அதன்மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் விடுதலை உணர்வை ஊட்டினார்.
பின்னாளில் கொள்கை முரண்பாட்டால் காங்கிரசில் இருந்து விலகிய போஸ் அகில இந்திய பார்வர்ட் (ALL INDIA FORWARD BLOC CENTRAL COMMITTIE)என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவரானார். அதன் பின்பு 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தை ஆரம்பித்தார். அவரது படையில் 600 தமிழர்கள் தங்களை இணைத்துகொண்ண்டனர். மலேசியா , சிங்கப்பூர் பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்களும் இந்தியாவில் இருந்து அங்கு சென்ற தன்னார்வலப்படை வீரர்களும் இதில் தங்களை இணைத்து கொண்டனர்.
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஜான்சிராணி பெயரில் படை ஒன்றை உருவாக்கினார். அதில் 1500கும் மேற்பட்டோர் இடம்பெற்று இருந்தனர்.
அப்படைக்கு தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சேகலையை கேப்டனாக நியமித்தார். நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு அளப்பெரியதாகும்.
இந்திய விடுதலை போராட்ட நேதாஜி தைவான் விமான விபத்தில் இறந்ததாக தகவல் வெளியானது. அனால் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மதம் 18 ஆம் தேதி நடந்த விபத்தில் அவர் இறக்கவில்லை என்று பேனிஸ் நகரத்தை சேர்ந்த ஜபிபி மொரேக் குறிப்பிட்டுள்ளார்.
நேதாஜியின் மரணம் இன்றுவரை உறுதி செய்யப்படாததால் இறவா வரம் பெற்ற இந்திய தலைவராக இன்றளவும் நம்மோடு வாழ்ந்து கொண்டுருக்கிறார்.






Leave a Comment