18.5 Crore Km’s Humans on Mars Just 90 Days to Reach.! | 90 நாட்களில் 18.5 கோடி KM's தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற திட்டம்..!
பூமியில் இருந்து சராசரியாக 18.5 கோடி தொலைவில் அமைந்துள்ளது செவ்வாய் கிரகம் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் காலடி பதிக்க நாசா திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
Astronaut Walking in Moon:
சிவப்பு கிரகமான செவ்வாயில் மனிதன் காலடி எடுத்து வைப்பது என்பது மனித குல வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்று சூழலானது பூமியுடன் ஒப்பிடுகையில் மிக மிக மோசமானதாகும் அண்டார்டிகாவை விடவும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது மிக மிக குறைவான அளவே ஆக்சிஜன் அங்கு உள்ளதால் மனிதன் உயிர் தப்பிப் பிழைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும் அதனால் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் எவ்வளவு காலம் அங்கு தங்கி இருக்கிறார்களோஅவ்வளவு ஆபத்தில் உள்ளனர் என்று அர்த்தம்.
மேலும் விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் போது அதிக காலம் விண்வெளியில் இருக்கும் போது விண்வெளி கதிர்வீச்சு மூலம் கதிர் வீச்சு நோய் புற்றுநோய் எலும்பு அடர்த்தி குறைதல் நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் ரத்த அணுக்கள் அறிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும் இந்த பிரச்சனைகளை சமாளிக்க வேண்டுமானால் விரைவாக பயணித்து விண்வெளியில் இருக்கும் நேரத்தை குறைத்தால் மட்டுமே ஆபத்து குறையும்..
பயண நேரத்தை குறைக்க வேண்டுமானால் விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமே ஒரே தீர்வு
Ultrasonic Nuclear Technologies Nuclear Power Planet Office :
இதற்கு அமெரிக்காவின் சியாட்டில் அடித்தளமாகக் கொண்ட அல்ட்ரோஸ் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் அணுசக்தி இயந்திரம் மூலம் இயங்கும் விண்கலத்தை தீர்வாக முன்வைத்துள்ளது.
ராக்கெட் எஞ்சின்கள் குறித்த யோசனை 1940ஆம் ஆண்டுகளில் இருந்தே முன்மொழியப்பட்டு வந்தாலும் விண்வெளி பயணத்துக்கு பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பம் தற்போது தான் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ISRO CAPTAIN SIVAN:
தற்போது பூமியிலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆளில்லா விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைய குறைந்தபட்சம் ஏழு மாத காலமாகிறது.
மனிதர்களுடன் செவ்வாய் கிரகத்தை அடைய குறைந்தபட்சம் 9 மாத காலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது
ஆனால் அணுசக்தி மூலம் இயங்கும் விண்கலம் 3 மாதங்களிலேயே செவ்வாய் கிரகத்தை அடையும் என்று அல்ட்ரோஸ் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் கூறி உள்ளது.
Kerosene, Liquid O2, Liquid Oxygen, and Blend alcohol
தற்போது இயக்கப்படும் ராக்கெட்டில் திரவ எரிபொருள் மூலம் இயக்கப்படுகின்றன மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்சிஜன் கலவை ஆல்கஹால் மற்றும் திரவ ஆக்சிஜன் கலவையாக திரவ எரிபொருளும் அலுமினியம் பவுடர் உள்ளிட்ட எரிபொருட்களின் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன இவற்றின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்ப வேண்டுமானால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை ஆகும்.
யுரேனியம். XC
அதனால் விண்வெளி நிறுவனங்கள் யுரேனியத்திலிருந்து வெப்பத்தை உருவாக்கும் அணு உலையை உருவாக்கியுள்ளன
இந்த வெப்ப ஆற்றல் ராக்கெட்டில் உள்ள எரிபொருளான திரவ ஹைட்ரஜனை சூடுபடுத்துகிறது அப்போது திரவ ஹைட்ரஜன் வாயுவை விரிவடைந்து உந்து சக்தியை உருவாக்கி விண்கலத்தை முன்னோக்கி செலுத்தும்,
அணு சக்தியால் இயங்கும் ராக்கெட்டுகள் இன்று பயன்படுத்தப்படும் ரசாயன ராக்கெட்டுகளை விட சக்தி வாய்ந்தவையாகவும் இருமடங்கு திறன் கொண்டதாகவும் இருக்கும் குறைந்த அளவிலான எரிபொருள் மூலம் வேகமாகவும் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.
இதன் மூலம் மூன்றாண்டுகள் பயணிக்க வேண்டிய செவ்வாய் கிரக பயணத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துவிட முடியும்.
Nuclear Thermal Propulsion:
இந்த நிலையில் (2500°C × 9/5) + 32 = 4532°F வெப்பநிலையில் செயல்படும்silicon carbide எரிபொருளை உருவாக்கியதன் மூலம் இந்த சிக்கலை தீர்த்து உள்ளதாக அல்டிராஸ் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது அணுசக்தி விண்கலத்தை பயன்படுத்தும்போது கதிர்வீச்சை போலவே அணு உலை கதிர் வீச்சும் பாதிப்பை ஏற்படுத்தும் ராக்கெட்டின் வடிவமைப்பு மூலம் இந்த அபாயத்தை தீர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
திரவ எரிபொருட்களை இயந்திரத்திற்கு குழுவினருக்கும் இடையே சேமிப்பதன் மூலம் கதிர்வீச்சைத் தடுத்து கவசமாக செயல்பட வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்
Military Armor:
ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் அணுவுலையில் உருவாகும் கதிர்வீச்சைத் தடுத்து விண்வெளி வீரர்கள் தங்கி உள்ள கலண்களை பாதுகாக்க முடியும்
மேலும் விண்கலம் மேலே எழும்பும்போது விபத்து ஏற்பட்டால் அணுஉலை மூலம் பூமிக்கு பிரச்சனை எழலாம் என்ற கேள்வி எழுந்தபோது வழக்கமான ராக்கெட் மூலம் விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டபாதைக்கு கொண்டு சென்று அதற்கு பிறகு அணு உலையை இயக்கி விண்கலத்தை இயக்க திட்டமிட்டு உள்ளனர்
இதனால் ராக்கெட் உடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ கதிரியக்கப் பொருட்கள் பூமியில் விழாது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் விண்வெளியில் சுற்றுவதன் மூலம் இயற்கையாகவே ஆபத்து ஏற்படாத அளவிற்கு கதிரியக்கப் பொருட்கள் சிதைந்து போகும்
Space in satellite Scrap:
அணுசக்தி ராக்கெட்டுகள் மனிதர்கள் மனித விண்வெளிப் பயணத்தை மேம்படுத்துவதோடு விண்மீன் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும்
நாசா பாதுகாப்புத் துறை போன்ற அரசு நிறுவனங்களுக்கு வணிகத் துறையில் ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் இதன் மூலம் சூரிய மண்டலத்திலுள்ள விடுவிக்கப்படாத ரகசியங்கள் கு விடை கண்டுபிடிக்க முடியும் என்று அல்டிராஸ் நியூக்ளியர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஒரு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி விண்கலங்கள் பரவலான பயன்பாட்டுக்கு வர குறைந்தது 20 வருடங்களாவது ஆகும் என்று கருதப்படுகிறது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Comment